உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்!
அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு ஆர்பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வகையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து பேசினார். அதில், தற்பொழுது தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்றி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இது கார் குண்டுவெடிப்பா அல்லது கேஸ் சிலிண்டர் வெடிப்பா என்பதை எல்லாம் தாண்டி இது தம் தீவிரவாதத்தின் தொடக்கம் என்பதை உணர வேண்டும். தற்பொழுது வரை இது குறித்து தமிழக அரசு எதுவும் பேசவில்லை. அதற்கு பதிலாக ஏன் அண்ணாமலை இது குறித்து கேள்வி கேட்கிறார், ஏன் இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார் என்பதை சாக்குப் போக்க சொல்லி இதனைப் பற்றி பேச விரும்புவதில்லை.
ஆனால் திமுக ஆட்சியில் நடக்கும் பல்வேறு குற்றங்களை, எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி அவர்கள் கூறிக்கொண்டே தான் வருகிறார். அதனை குறைகளாக பார்க்காமல், அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது கோவையில் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி திமுக எதிர்க்கட்சி ஆக இருந்த பொழுது தங்கள் மீது குற்றங்கள் சுமத்தி கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியது. இது அனைத்தின் மீதும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முற்றுபுள்ளி வைத்தார் . ஆனால் தற்பொழுது நாங்கள் ஆதாரத்தோடு குற்றங்களை நிரூபித்தால் கூட நீங்கள் கண்டு கொள்வதில்லை.
அவ்வளவு ஏன் தற்பொழுது வரை கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை நீங்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். தீவிரவாத அமைப்பு தமிழகத்தில் வேரூன்றி பரவி வந்தால் எந்த ஒரு தொழில் முதலீட்டாளர்களும் இங்கு வர மாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.