போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

0
152

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது.

மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அவ்வாறு குடிப்போதையில் வருபவர்களை பிடித்தால் உடனடியாக அபராதம் விதிப்பார்கள்.அபராத ரசீது மற்றும் பெற்று கொண்டு செல்பவர்கள் பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர் என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அபராதத் தொகை செலுத்தாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை தற்போது நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நடவடிக்கையானது நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் 14நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.அதனையடுத்த அந்த வாகனம் ஏலம் விடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleகத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி!  ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை!கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி!  ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை!
Next articleவானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!