கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி?

0
203

கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி?

சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவை மற்ற அணிகளோடு ட்ரேட் செய்ய விருப்பம் இல்லை என சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது.

இதையடுத்து ஜடேஜா சமூகவலைதளங்களில் சி எஸ் கே அணியை பின் தொடர்வதை நிறுத்தினார். சி எஸ் கே அணி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். இதற்கிடையில் ஜடேஜாவை வீரர்களை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள சுப்மன் கில்லை வாங்க முயல்வதாக சொல்லப்படுகிறது. மேலும் டெல்லி அணியின் ஜடேஜாவைக் கைப்பற்றுவதில் முனைப்புக் காட்டியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது சி எஸ் கே அணி நிர்வாகம் ஜடேஜாவை ட்ரேட் செய்து மாற்றிக்கொள்ளும் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அணியின் கேப்டன் தோனிதான் என்றும் சொல்லப்படுகிறது. அணிக்கு ஜடேஜா கட்டாயம் தேவை என்று தோனிதான் அழுத்தம் கொடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous article5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!
Next articleதமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here