சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைவு? டான்ஸ்டியா வைத்த கோரிக்கை முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை!
சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டனைத்தை குறைக்க டான்ஸ்டியா சார்பில் தமிழக முதல்வரிடம் சிறு ,குறு தொழிற்சங்க தலைவர் கே .மாரியப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.கடந்த செப் மாதம் 9 தேதி அன்று மின்வாரியம் மூலம் மின் கட்டண உயர்வினால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பை குறித்து முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் பீக் ஹௌர்சீல் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை குறைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.அதாவது, மாலை 6 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ரூ 35 மட்டும் வசூலித்து வந்தனர்.
தற்போது 50 கிலோ வாட் குறைவாக பயன்படுத்தினால் ரூ 75 எனவும் ,50 முதல் 112 கிலோ வாட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ .150 எனவும் ,அதே 112 கிலோ வாட் மேல் பயன்படுத்தினால் ரூ 550 எனவும் நிர்ணயம் செய்து உள்ளது ,இதனால் தொழில் வளம் மிகவும் பாதிப்பு உள்ளாகிறது.அதனால் மின்சார கட்டணத்தை குறைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.