மத்திய அரசு கொண்டுவந்த உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
116

உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்குதான வழக்கில் 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து 103 வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. ஆனால் பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்று தெரிவித்து யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு அரசியல் கட்சிகள் தனி நபர்கள் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்கள்.

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு தலைமை நீதிபதி யூ யூ லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ், மகேஸ்வரி, எஸ் பி பரிதிவாலா, பெல்லா திரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது. யூத் ஃபார் ஈக்வாலிட்டி, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டனர்.

இதன் வாதங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது இதில் 4 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 4 நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

தலைமை நீதிபதி யு யு லலித், தினேஷ் மகேஸ்வரி, எஸ் பி பர்திவாலா,வெல்லா திரிவேதி உள்ளிட்ட 4 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில், நீதிபதி ரவீந்திரபட் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.