அமெரிக்கா, ஈரான் பரபரப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கச்சா எண்ணையில் முதலீட்டை குறைத்து தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்தது.
குறிப்பாக கடந்த 6 நாட்களாக தங்கம் விலை அதிக அளவில் அதிகரித்தது.
இந்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.1,288 உயர்ந்தது குறிப்படத்தக்கது.இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் சுமூக நிலை திரும்பி இருப்பதாலும், சர்வதேச சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாலும் தங்கம் விலை குறைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 33 ரூபாய் குறைந்து 3863 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 264 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 30904ரூபாயாகவும் உள்ளது.
அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 4056 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 40560 ஆகவும் உள்ளது.வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 51.20ஆகவும், 1கிலோ ரூபாய் 51200க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.