நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு!

0
190

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு!

டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.கடைசியாக அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இந்நிலையில் திகார் சிறையில் ஒரே தூக்கு மேடை உள்ள நிலையில் மேலும் சில தூக்கு மேடைகள் தயாராகி வருவதாக தகவல் வந்தன.

இதோடு திகார் சிறையில் குழிகள் தோண்டும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டது. குற்றவாளிகள் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என கூறப்பட்டது. இதனிடையே குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Previous articleபண்டிகை நேரத்தில் குறைந்த தங்கத்தின் விலை?
Next articleவாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here