மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! 

0
198
Attention students! 10th, 11th and 12th Class Public Examination Date Released!
Attention students! 10th, 11th and 12th Class Public Examination Date Released!

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.

மேலும் மாணவர்களுக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு  நடத்தப்பட்டது.தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டதால் உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் அடுத்தடுத்து தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை தலைமை செயலகத்தில்  நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு பட்டியலை வெளியிட்டர்.தமிழகத்தில் 2022 -20223 ஆம் கல்வியாண்டின் 10,11மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறும்.10ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறும்.

பிளஸ் ஒன் பொது தேர்வு மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.அதனையடுத்து பிளஸ் டூ பொது தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் பொது தேர்வு காலை 10 மணியிலிருந்து 10.10 மணி வரை வினாத்தாள் படிக்க வேண்டும்.10.10 முதல் 10.15வரை மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்,அதனை தொடர்ந்து 10.15மணியில் இருந்து மதியம் 1.15 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

அதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடும் நேரத்திலேயே தேர்வு முடிவு வெளியிடும் தேதியும் அறிவிக்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் குறித்து தேதி அறிவிக்கப்படவில்லை.

மேலும் அரசு தேர்வுகள் இயக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் பொது தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்து ஒரு மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் தேர்வு தேதிகளில் தேர்வு முடிவு தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Previous article2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திருத்தச் சட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Next articleசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு!