சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்!
கடந்த மாதம் முதலில் இருந்த அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து அனைவரும் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்,கடந்த வாரம் காலை நேரத்திலும் மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.ஆனால் வட மாநிலங்களில் மழை குறைந்துள்ளது.மேலும் வங்கக்கடலில் அடுத்த 24மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளது.
அந்த காற்றழுத்தம் தமிழ்நாடு ,புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரக்கூடும் அதனால் வரும் 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரும்.அதனால் தற்போது உள்ள சூழலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் தீவிரம் குறித்து கணக்கிட முடியாத நிலை உள்ளது.மேலும் தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழையும் ,நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.