கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்!

0
132

கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்!

விராட் கோலி, இந்திய அணிக்காக 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் எடுத்தது உட்பட, மூன்று அரை சதங்களைப் பதிவுசெய்து அபாரமான ஃபார்மில் இருக்கும் கோஹ்லி, திங்களன்று, அக்டோபர் 2022க்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

கோஹ்லி, அக்டோபரில் நான்கு டி 20 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட் செய்தார், ஆனால் அவர் T20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு மாயாஜால 82* உட்பட மூன்று மறக்கமுடியாத ஆட்டங்களை வெளிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார்.

தன்னுடைய பழைய ரன்மெஷின் பார்முக்கு திரும்பியுள்ள கோலி இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் தூணாக இருந்து விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணிக்காக 2014 ஆம் ஆண்டு நடந்த அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து அசத்தல் வெற்றியை பெறவைத்தார்.

அதே போல 2016 ஆம் ஆண்டு இந்திய அணி அரையிறுதிக்கு சென்ற போதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து அசத்தினார். அதனால் இன்றைய அரையிறுதிப் போட்டியில் கோலியின் பங்களிப்பு பெரியளவில் இந்திய அணிக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Previous articleவணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து!
Next articleபொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!