சரிவில் இருந்து மீட்ட கோலி… வான வேடிக்கைக் காட்டிய பாண்ட்யா… இந்தியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்த இலக்கு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி தற்போது அடிலெய்டில் நடந்து வருகிறது.
டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டத்தை விளையாடும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் விரைவில் ஆட்டமிழந்தார்.
சரிவில் இருந்து இந்திய அணியை கோலி மீட்டு, நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் முதலில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார் ஹர்திக் பாண்ட்யா. அவர் 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து இந்திய அணியை 168 ரன்கள் என்ற கௌரவமான இலக்குக்கு கொண்டு வந்தார்.
தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடி அவுட் ஆனதால் அடுத்தடுத்து வந்த வீரர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. தற்போது இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகிறது.