முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்! 

0
235
Postponement of important exams! Dissatisfied selectors!
Postponement of important exams! Dissatisfied selectors!

முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்!

தமிழகத்தில் மீண்டும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் தட்டச்சு தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வாளர்கள்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், தட்டச்சு தேர்வு தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும். ஆனால் 2022 மார்ச் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு தாள்-2 முதலிலும் தாள்-1 இரண்டாவதாகவும் நடைபெற்றது.

இதனை மீண்டும் மாற்றி தாள்-1 முதலிலும் தாள்-2 இரண்டாம் நிலையிலும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து செப்டம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்த முறையில் நடத்த வேண்டாம் என்று தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தேர்வு முறையை மாற்றி நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் தட்டச்சு தேர்வுகள் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை!
Next articleபொய் செய்திகளை பரப்புவதற்கு தான் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!  போலி கணக்குகளுக்கும் இனி ப்ளூ டிக்!