பொய் செய்திகளை பரப்புவதற்கு தான் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!  போலி கணக்குகளுக்கும் இனி ப்ளூ டிக்!

0
110
elon-musk-bought-twitter-to-spread-fake-news-blue-tick-for-fake-accounts
elon-musk-bought-twitter-to-spread-fake-news-blue-tick-for-fake-accounts

பொய் செய்திகளை பரப்புவதற்கு தான் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!  போலி கணக்குகளுக்கும் இனி ப்ளூ டிக்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனா எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் டுவிட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.

அதனையடுத்து அவர் கூறுகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.தற்போது வரை ப்ளூ டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ 400 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.அந்த கட்டணத்தையும் எலான் மஸ்க் உயர்த்தினார்.பொதுவாக ப்ளூ டிக் கணக்குகளை பிரபலங்கள் ,புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் டுவிட்டர் பக்கம் அவரவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதனை உறுதி செய்துகொள்ளும் வகையில் ப்ளூ டிக் வசதி அமைந்துள்ளது.

இந்த ப்ளூ டிக் பெறுவதற்கான அடையாளமாக முன்பு டுவிட்டர் ப்ளூ டிக் பெறுவதற்கு வழிமுறைகளை சற்று கடினமாக இருந்தது.இந்நிலையில் எலான் மஸ்க் தற்போது புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.அந்த புதிய விதிமுறையின் படி போலி கணக்குகளுக்கும் ப்ளூ டிக் பெற்று வருகின்றது.

இந்த நடைமுறையினால் போலிச் செய்திகள் அதிகம் பகிரப்படும் என்று டுவிட்டர் பயனாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொய்களைப் பரப்புவதற்காக தான் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியுள்ளார் என விமர்சித்தார்.

இந்நிலையில் தற்போது ப்ளூ டிக் பெறுவதில் நடக்கும் தவறுகளை பயனாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.மேலும் ப்ளூ டிக் பெறுவதற்கு மாதம்தோறும் கட்டணமாக எட்டு டாலர் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறைக்கு வந்துள்ளது.

author avatar
Parthipan K