11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

Photo of author

By Vinoth

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

ரோஹித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவை சீண்டும் விதமாக விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை “வரலாற்றில் மிகவும் குறைவான பர்பார்ம் செய்துள்ள வெள்ளை பந்து அணி” என்று கூறியுள்ளார். இந்த தோல்வி 2013 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் கோப்பை பெறமுடியாதது மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இறுதிப் போட்டிக்கு வர முடியாமல் போனது குறித்து சீண்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்திய அணி தற்போது வரை டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா நம்பர்-1 அணியாக இருந்து வருகிறது. பின்னர் குழுநிலையில் ஆதிக்கம் செலுத்தி, ஐந்து ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி குரூப் 1ல் முதலிடத்தைப் பிடித்தது. இருப்பினும், அடிலெய்டில் செமி பைனலில், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது.

அரையிறுதிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 168  ரன்கள் சேர்க்க, அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அரையிறிதி போட்டியில் இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்திருப்பது கடுமையான விமர்சனங்களை இந்தியாவுக்குள்ளும் உருவாக்கியுள்ளது.