ட்விட்டர் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு! ப்ளூ டிக் இனி இல்லை?
எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார்.இவர் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.
அதனைதொடர்ந்து அவர் கூறுகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் புகழ்பெற்றவர்கள் ,பிரபலங்கள் உள்ளிட்டோர் அவரவர்களின் ட்விட்டர் பக்கங்களை அதிகாரப்பூர்வ பக்கங்களாக காட்ட ப்ளூ டிக் என்பதை ரூ 400கட்டணம் செலுத்தி பெற்று வந்தனர்.
ஆனால் எலான் மஸ்க் ப்ளூ டிக் கணக்குகளை பெற செலுத்தும் கட்டணங்களை உயர்த்தியுள்ளார். மேலும் இந்த ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் முன்னதாக சற்று கடினமாக இருந்த நிலையில் தற்போது போலி கணக்கு வைத்திருப்பவர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பெற முடியும்.
அதனால் போலி தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது இதனை ட்விட்டர் பயனாளிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.மேலும் கட்டணம் செலுத்தி போலி கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது அதனால் தற்போது ப்ளூ டிக் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..