தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

0
1026

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் 300 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு, இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ரசிகர்களின் வரவேற்புடன் பல்வேறு திரையரங்குளில் வெளியிடப்பட்டது. சில தியேட்டர்களில் காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி வெளியிட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பேனர் வைத்து, நடனமாடி ரஜினியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் வேளையில், இணையத்தில் புதுப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மூலம் தர்பார் படமும் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த தர்பார் படக்குழுவினரும், ரஜினியின் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடைசெய்ய வேண்டும் என்று பல நாட்களாக சினிமா துறையை சார்ந்தவர்கள் போராடியும் தடை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்! தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!
Next articleகன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!