இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
189

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! வருவாய்த்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் இது பற்றி கூறியதவாறு:

கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் கடலோரப் பகுதிகளில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்றும்,பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்து முடித்த பிறகு நிவாரணத் தொகை விவரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மழையால் கான்கிரீட் வீடு இடிந்து விழுந்திருந்தால் ரூ 95,000 வரை நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் குடிசை வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்திருந்தால் 5000 நிவாரண தொகையும்,வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டிருந்தால் 4800 ரூபாயும்,குடிசை வீடு பாதி இடிந்து விழுந்திருந்தால் 4100 ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கும் விதி ஏற்கனவே உள்ளதாகவும்,பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுவதுமாக ஆய்வு செய்து நிவாரண தொகையை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கனமழையால் இதுவரை 35 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!
Next articleடிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்!