ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியம் நன்றாக நடக்கும்
ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு உங்கள் நாள் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் நினைத்த காரியம் நன்றாக நடக்கும். நிதி இன்றைக்கு உங்களுக்கு திருப்திகரமாக அமையும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணவு ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களுக்காக நலனுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்கும் சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிரடி நுட்பமான திட்டங்களை அறிவித்து வெற்றி அடைவீர்கள் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் அமையும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் உடன்பிறப்புகளில் வருகையால் உள்ளம் கலைகட்டி கொண்டு மனம் மகிழ்ந்து போவார்கள். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள்.
கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு வருமானம் வாய்ப்புகள் உறுதியாகும். மூத்தோர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறந்து மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடையை அணிந்து சரஸ்வதி தேவி வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.