போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்.இவர் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகர் விக்னேஷை அழைத்து இவ்வாறு மாணவிகளை கேலி ,கிண்டல் செய்ய கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.அன்று விக்னேஷ் பள்ளிக்கு குடிபோதையில் வந்துள்ளார்.மேலும் தலைமை ஆசிரியர் கூறிய அறிவுரையினால் கோபம் அடைந்த விக்னேஷ் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அவரை தாக்கியுள்ளார்.
மாணவன் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.அதனை கண்ட ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் இந்த அசம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதனை தொடர்ந்து அந்த மாணவன்பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதனை தடுக்க பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவன் போதையில் தலைமையாசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.