மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள்!
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும் நாளாக உள்ளது. ஏனென்றால் சத்ரு ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கடமை உணர்வுடன் காணப்படுவீர். குடும்ப உறவு இன்று அருமையாக உள்ளது. கணவன் மனைவியுடைய உற்சாகமான சூழ்நிலை அமையும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் இன்று நல்ல தகவல்களை தருவார்கள்.
பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்து வந்த சில கருத்து வேற்றுமைகள் களைந்து ஒரு வித ஒற்றுமை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையில் இருக்கும் நண்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள்.
புத்தகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் காரியம் அருமையாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்சாகமாக பணிபுரிவார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். கொடுத்த கடன்கள் வசூலாகி பரவசப்படுத்தும் கொடுக்கல் வாங்கலில்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் வெளியூர் பயணங்களின் மூலம் சில நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்