சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

0
117

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

சபரிமலைக்கு அனைத்து வயது. பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளா அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதாவது வருடாந்திர மண்டல மகர விளக்கு பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கப்படாத காரணத்தினால் பக்தர்களின் வருகைக எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கேரளா அரசு சார்பிலும் மற்றும் அண்டை மாநிலங்களின் சார்பிலும் சபரிமலைக்கு செல்ல பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு பணி நிமித்தமாக சபரிமலையில் சுமார் 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக காவல்துறையினருக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது.

அதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த அறிவுறுத்தல் தவறுதலாக அச்சு அடிக்கப்பட்டதாக கூறி,அனைத்து பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பினை கேரளா அரசு வாபஸ் பெற்றுள்ளது.

சபரிமலைக்கு பத்து வயதுக்கு கீழ் உள்ள பெண்களும் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வாசகத்திற்கு பதில் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகவும்,10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
Pavithra