இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!

0
173

இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!

மராட்டிய மாநிலத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து இளம்பெண் குதித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ டிரைவர் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளார்.இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அச்சிறுமி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த சிலர் சாலையில் விழுந்து கிடந்த அந்த இளம் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சையது அக்பர் ஹமீதை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்டோவில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வால், ஓடும் ஆட்டோவிலிருந்து இளம்பெண் குதித்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சக இளம் பெண்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Previous articleபள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
Next article10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!