பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
221

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

வருகின்ற சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி பள்ளி வேலை நாளென்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், தங்களது பணியிடத்திற்கு செல்ல அக்டோபர் 25ஆம் தேதியும் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசால் பொது விடுமுறை அளிக்கப்பட்டது.

அப்போதே பள்ளிகளுக்கு விடப்படும் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்ய மற்றொரு நாள் பள்ளி வேலை நாளாக வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.மேலும் இதனிடையே மழையின் காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறையும் விடப்பட்டது.

இதன் காரணமாக வருகின்ற சனிக்கிழமை தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Previous articleஇன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
Next articleஇளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here