வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!
வீடு என்றாலே அதில் பூச்செடிகள் ,காய்கறி செடிகள் இருப்பது வழக்கம்தான். அவ்வாறு நாம் வைத்திருக்கும் செடிகளிலும் ஆன்மீக குறிப்புகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் என்ன பயன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
வெற்றிலை கொடி என்பது கட்டாயம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும். வெற்றிலையில் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெற்றிலையில் ஐம்பெரும் தெய்வங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிலை செடியை நாம் வீட்டில் வளர்க்கும் போது பணத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
வெற்றிலை கொடியை வீட்டில் ஈசானி மூலை என்று கூறக்கூடிய வடகிழக்கு மூலையில் வைத்து வளர்க்கும் பொழுது லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும். அது மட்டும் இன்றி நம் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகளும் அகலம். வெற்றிலை கொடியை வாங்கி வந்த உடன் அப்படியே நாம் நிலத்தில் வைக்க கூடாது அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றது.
முதலில் வெற்றிலை கொடி வைப்பதற்கு என சிறிதளவு பள்ளம் தோண்டி இரண்டு நாட்கள் விட்டு விட வேண்டும். அதன் பிறகு செடியை நடுவதற்கு முன்னால் மூன்று ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் குங்குமம் மற்றும் மஞ்சள் சேர்த்து அந்த குளியல் மகாலட்சுமி தேவியை நினைத்துக் கொண்டு போட வேண்டும்.
பிறகு வெற்றிலை கொடியை நட வேண்டும். ஒரு வீட்டில் வெற்றிலை கொடி எவ்வாறு வளர்கின்றதோ அதுபோலவே அந்த வீட்டில் செல்வாக்கும் செல்வ செழிப்பும் வளரும் என்பது நம்பிக்கை. வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள் என்பது வெற்றிலை சுண்ணாம்பு பாக்கு என மூன்றையும் நாம் சேர்த்து உண்ணும் பொழுது அவை ஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
அதன் பிறகு வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். வெற்றிலை சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.