இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?

0
216
Indian Meteorological Department announced! Which places are aware of the Orange Alert?
Indian Meteorological Department announced! Which places are aware of the Orange Alert?

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.தொடர் கனமழையின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

அதனையடுத்து மழை குறைந்ததால் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளிலும் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

அதன் காரணமாக அடுத்த 18 மணி நேரத்தில் இவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்என தெரிவித்துள்ளனர்.அதனால் நவம்பர் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் ஆரஞ்சு  அலெர்ட் விடுக்கப்படுவதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleபல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!
Next articleஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்!