ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்!

0
136
Good news for pensioners! Once again, the old method is followed by the information released by the government!
Good news for pensioners! Once again, the old method is followed by the information released by the government!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்!

இன்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என பேசப்பட்டது.இந்நிலையில் முன்னதாக ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்தது.அதன் பிறகு மீண்டும் அந்த மாநிலங்களில்  ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.

பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்.இந்த மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது பொதுவாக அவர்கள் இறுதியில் வாங்கும் ஊதிய தொகையில் பாதியாக வழங்கப்படுவது தான்.

இந்த ஓய்வூதிய திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு செலுத்துவார்கள்.

அதனையடுத்து அவர்கள் எப்போது ஓய்வு பெறுகின்றார்களோ அப்போது மொத்தமாக குறிப்பிட்ட தொகையை பெறுவார்கள்.ஆனால் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் அதனால் அவர்களின் கோரிக்கைகள் ஏற்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தலாம் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K