மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!

0
195
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு நிறைந்த நாள். குடும்ப உறவு இன்றைக்கு அருமையாக இருக்கும். மனதில் இருக்கும் கஷ்டங்கள் கவலைகள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். கணவன் மனைவியிடையே அற்புதமான அன்யோனியம் காணப்படும்.

பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைப்பதால் மனதில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் சுபிட்சகரமாகவும் அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை உருவாக்கும் நாள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!!எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!
Next articleஇந்த ராசிக்காரர்கள் அதீத ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here