மதம் மாற மறுத்த காதலியை கொலை செய்தவர்களை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டு பிடித்தனர்.
உத்திரபிரதேச மாநிலம், லக்னோ நகரில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள காலணியில் வசித்து வந்தவர் சுபியான். இவர் அந்த பகுதியை சேர்ந்த நிதிகுப்தா என்ற இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு அவர்களுக்கிடையே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, குடியிருப்பிமன் நான்காம் மாடியில் இருந்து அவரை தள்ளி விட்டார்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அந்த இளம்பெண்ணை மதம் மாற சொல்லி சுபியான் கட்டாயபடுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், சுபியான் நிதி குப்தாவை கட்டாயபடுத்தியது தெரியும் என தெரிவித்தனர்.
தலைமறைவாக இருந்த சுபியா தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவித்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சவுராஹா பகுதியில் பவர் அவுஸ் அருகே அவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவரை அங்கே தேடி சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும் சுபியானுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
அப்போது காவல்துறையினர் சுபியானை துப்பாக்கியில் சுட்டனர். காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.