ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன!

சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் உள்ள கட்டிடங்கள் சிஆர்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து ரேடிசன் ப்ளூ நிறுவனம் ஆனது 1100 சதுர அடியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், இரண்டு மாதங்களுக்குள் அந்நிறுவனமே கட்டிடங்களை இடித்து தகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் மாசு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழகத்திற்கு 10 கோடி இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டனர்.ரேடிசன் ப்ளூ நிறுவனத்தின் கிளைகள் உலகம் முழுவதும் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமித் ஜெயின் டெல்லியில் உள்ள காமன்வெல்த் பகுதியில் வசித்து வருகிறார். இன்று காலை நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த அவர் வீட்டின் வேலையால் உடனடியாக அங்கு உள்ளவர்களை அழைத்து தூக்கிட்டு கொண்டதை தெரிவித்துள்ளார். பின்பு போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அமித் ஜெயின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் தானாகவே தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கு மாட்டி விட்டு சென்று விட்டார்களா என்ற பாணியில் விசாரணை செய்து வருகின்றனர்.தற்பொழுது வரை இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று எந்த ஒரு காரணமும் அறியப்படவில்லை.

Leave a Comment