மிதுனம் இன்றைய ராசிபலன்: நன்மைகள் அதிகரிக்கும் நாள்

Photo of author

By CineDesk

மிதுனம் இன்றைய ராசிபலன்: நன்மைகள் அதிகரிக்கும் நாள்

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள். உங்கள் மனதில் இருந்த கவலைகள் விலகி சந்தோஷமாக இருப்பீர்கள்.

குடும்ப உறவுகள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமானம் திடீரென வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்ப அச்சம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குழந்தைகள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை வந்து அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.