ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை!
ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில்களில் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகள் என்றால் ஏசி 3 அடுக்கு வகுப்புகள் தான்.மேலும் இந்த பயண வகுப்பு மிக பிரபலமானது.இதனை தொடர்ந்து பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏசி பொருளாதார பெட்டிகள் 3 இ வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த 3 இ வசதியில் ரயில் கட்டணம் 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாகவே வசூல் செய்யப்பட்டது.ஏசி 3 அடுக்கு பெட்டியில் 72 பேர் பயணம் செய்யலாம்.ஆனால் ஏசி 3 இ பெட்டியில் 83பேர் பயணம் செய்யலாம்.மேலும் இந்த பெட்டிக்கு முன்பதிவு செய்யும் பொழுது ஏசி 3 பொருளாதார வகுப்பு என்ற பிரிவை குறிப்பிட வேண்டும்.
இந்நிலையில் ரயில்களில் 3 இ என்ற வசதி ரத்து செய்யப்பட்டு இனி ஏசி 3 இ வசதிகள் இல்லை என ரயில்வே முடிவு எடுத்துள்ளது என கூறப்படுகின்றது.இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது அடுத்த சில மாதங்களுக்கு ரயில்களில் ஏசி 3 இ வகுப்புகள் கிடையாது.ஏசி 3 இ வகுப்புகள் ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும்.இந்த பனி அடுத்த நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும்.தற்போது 436 ரயில்களில் ஏசி 3 இ பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.11277 ரயில்களில் ஏசி 3 ஆம் வகுப்பு பெட்டிகள் உள்ளது என கூறினார்.