உங்களுக்கு நீர் உடம்பா? வெந்தயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க!!

0
198

உங்களுக்கு நீர் உடம்பா? வெந்தயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க!!

பலருக்கும் உடலில் நீர் அதிகமாக காணப்படுவதால் உடல் எடை கூடுதலாக இருக்கும். குறிப்பாக இந்த நீர் உடம்பானது கர்ப்பிணி பெண்கள் மற்றும் வீட்டில் சரிவர வேலை செய்யாதவர்களுக்கு தான் இவ்வாறு உள்ளது. இவ்வாறு நீருடமும் உள்ளவர்கள் இதனை குறைக்க முடியாமல் அவதிப்படுவர்.

இந்த நீர் உடம்பு காரணமாக அவர்களால் எழுந்து ஒரு வேலையும் செய்ய இயலாது. இந்த பதிவில் வரும் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீர் உடம்பை படிப்படியாக குறைக்கலாம். நீர் உடம்பு உள்ளவர்களுக்கு கால் மற்றும் கைகளில் அதிக நீர்கள் வெளியேறும். இவர்கள் அணிந்திருக்கும் அணிகலன் மற்றும் உடைகளினால் இவர்கள் எப்பொழுதுமே இறுக்கமாகவே இருப்பது போல் உணர்வார்கள்.

சோடியம்

முதலில் இவ்வாறு இருப்பவர்கள் சோடியம் நிறைந்த உணவு பொருளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது மார்க்கெட்டுகளில் விற்கும் பலவித பொருட்களில் சோடியம் கட்டாயம் உள்ளது. அவ்வாறு இருக்கும் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.

அதேபோல நீர் உடம்பு உள்ளவர்கள் அதிக அளவு பொட்டாசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வெந்தயம் நீர் உடம்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. வெந்தயத்தை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதனை தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளை பருகி வர வேண்டும். இவ்வாறு செய்து வர நீர் உடம்பு உள்ளவர்களின் எடை குறையும்.

 

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here