அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parthipan K

Government cable TV broadcasting! The action order issued by the Supreme Court!

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் ஒன்று அறிவிக்கப்பட்டது.அதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு 60 லட்சம் எஸ்.டி செட்டாப் பாக்ஸ் ,பத்து லட்சம் எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கபட்டது.இந்த டெண்டரை கோவையில் தொழிற்சாலை வைத்துள்ள மும்பையைச் சேர்ந்த மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ,சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனமும் வாங்கியது.

இந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்தால் 90 நாட்களில் தரவேண்டும் என்று கூறி ஒப்புதல் வழங்கப்பட்டது.அதனையடுத்து ஆர்டர் கொடுக்கப்பட்டது.ஆனால் ஒப்பந்தத்தின்படி 90 நாட்களுக்குள் வழங்கவில்லை.அவ்வாறு கால தாமதம் ஏற்பட்டதால் ஒரு வார கால தாமதத்திற்கு 0.5 சதவீதம் முதல் அதிகபட்சம் 5 சதவீதமாக அபராதம் விதிக்கப்படும்.அதற்கு பின்னரும் கால தாமதம் செய்தால் ஆர்டர் ரத்து செய்யப்படும்.

மேலும் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் ஆர்டர் தராத காரணத்தால் அவர்களிடம் விளக்கம் கேட்டு 2018 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.எச்சரிக்கை விடுத்தும் முறையாக ஆர்டர் செய்த செட்டாப் பாக்ஸ்களை வழங்கவில்லை.அதனால் அந்த நிறுவங்களுக்கு வழங்கப்படும் தொகையில் சுமார் ரூ52.கோடி நிறுத்திவைக்கப்பட்டது.கடந்த ஜூலை மாதம் அந்த நிறுவனங்கள் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது அதில் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.

அதனை பிறகு கேபிள் டி.வி சேவையையும்,செட்டாப் பாக்ஸ் சேவையையும் ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனம் நிறுத்தியது.இந்த நிறுவனம் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் சேவை நிறுத்தியது குறித்து மனு தொடரப்பட்டது.அந்த மனு நேற்று நீதிபதி செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அந்த விசாரணையில் அரசு கேபிள் டிவியை முடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு நீங்கள் கேபிள் டிவி சேவையை நிறுத்தியது சட்டப்படி தவறு.இந்த பிரச்சனைக்கு மத்தியஸ்தர் மூலமாக 90 நாட்களில் தீர்வு காண வேண்டும்.

அதுமட்டுமின்றி அரசு கேபிள் டிவி சேவையியை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் ஒப்பந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.