பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.
கொரோனா பரவல் நடப்பாண்டில் தான் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளும் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றது
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ததில் அதிகமாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி கல்வி பொதுத்தொகுப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்ககளை மீண்டும் தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம் ,இயற்பியல் ,வேதியியல் ,வரலாறு ,வணிகவியல் ,பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.