ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்!

0
174
GST action hike for online gaming! Users in shock!
GST action hike for online gaming! Users in shock!

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி,போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.இந்தியாவில் அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.அதில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

மேலும் இது குறித்து ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.தற்போது அந்த அமைச்சர் குழு தனது இறுதி கட்ட முடிவை அறிவித்துள்ளது.

இனி அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் கேசினோ மற்றும் குதிரை பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு ஜிஎஸ்டி உயர்வதால் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!
Next articleதிருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!