கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் திருப்திகரமாக அமையும்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் சில நேரங்களில் சில மன சஞ்சலத்துடன் இருப்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அதிகம் முன்னேற்றம் காணப்படும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.