மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். ஏனென்றால் சீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்ப உறவு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பான பாதையில் செல்லும்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் கண்டிப்பாக இன்று சந்தோஷமான சூழலியை காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்மை வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு முயற்சிகள் அருமையாக நிறைவேறும். உடல் ஆரோக்கியம் அருமையாக உள்ளது.
மாணவ மாணவிகளுக்கு அருமையான வாய்ப்புகள் எல்லாம் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக இருந்தால் வெற்றிகள் குவியும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.