அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

0
153
DMK MK Stalin-Latest Tamil News
DMK MK Stalin-Latest Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இந்த சுற்று பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதற்காக இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு அவர் திருச்சி விமான நிலையத்தை வந்தடைவார் என்று கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு, நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅமெரிக்காவின் பிரபல சமூக வலைதளங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களை குறி வைக்கும் முக்கிய நிறுவனம்!
Next articleவாய்ப்பாடு தெரியாததால் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்!