FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்!
உலகம் முழுவதும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்று தான் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.
அப்போது பிரான்ஸ் அணி தான் வெற்றியை தட்டி சென்றது. தற்போது இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகின்றது.இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு அவரவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சுற்றில் கானா மற்றும் தென்கொரியா அணிகள் மோதியது.அதில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணி வெற்றி பெற்றது.நேற்று நடந்த ஆட்டத்தில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது.
மேலும் முதல் ஆட்டத்தில் கானாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று அவர்களின் இறுதி ஆட்டத்தை தென் கொரியாவுடன் மோதுகின்றது.
மேலும் பிரேசில் அணி ஸ்விட்சர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கிலும் செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.அதனை அடுத்து பிரான்ஸ் அணி டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கிலும் ,ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.இதையடுத்து பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியந்துள்ளனர்.