மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை!

மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை!

ஆன்லைன் மோசடி கும்பலானது பல முறைகளில் மக்களிடம் பணத்தை அபகரித்து வருகிறது. மக்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் உட்பட அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். வங்கியிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்து விடுகின்றனர்.

இதுபோல பல மோசடிகள் நடந்து, தற்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். அதனால் மோசடி கும்பலின் அடுத்த டார்கெட்டாக தற்பொழுது மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் செல்போன் எண்ணை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் வந்துள்ளது, அதை வாங்க வேண்டும் என்றால் ரூ 3 ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரை முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதுபோல கடலூர் மாவட்டத்தில் மாணவர்களிடம் ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக கூறி பணம் கேட்டுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட மாணவர்கள் உடனடியாக தங்களது ஆசிரியரை தொடர்பு கொண்டு இவ்வாறு பணம் கேட்பதாக கூறியுள்ளனர்.ஆசிரியரோ, இவ்வாறான மோசடி கும்பலை நீங்கள் நம்ப கூடாது. உங்களுக்கு ஸ்காலர்ஷிப் ஏதாவது வந்தால் உங்களது வங்கி கணக்கிற்கு தான் போடப்படும்.

எனவே இவ்வாறான மோசடி கும்பலை நம்பி எந்த ஒரு பணத்தையும் தர வேண்டாம் என்று கூறியுள்ளார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வதை கேட்டுள்ளனர். பின்பு காவல்துறையில் இவ்வாறு மோசடி கும்பல் மாணவர்களை குறி வைத்து பணம் வசூலித்து வருவது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். போலீசார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.