குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்க கோரி டிக்டாக் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
டிக்டாக்கில் பிரபலமானவர் ரவுடிபேபி சூர்யா என்ற சுப்புலெட்சுமி. இவர் டிக்டாக்கில் ஆபாச வீடியோக்கள் வெளியிட்டது மட்டுமின்றி தனக்கு எதிராக கமெண்ட் செய்பவர்களையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். சீனசெயலிகளை தடை செய்ததை அடுத்து, யூட்யூபில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரியில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனை அடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் சிகந்தர் மீது புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். இதனை அடுத்து, இருவரையும் குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தன் மீதான இந்த புகாரைய் எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் காழ்புணர்ச்சி காரணமாக தன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதாகவும் அறிவுரைக்கழகம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீத்பதிகள் பி.என் பிரகாஷ் , ஆர்.எம்.டி டீக்காராம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் போது வழக்கறிஞர் சூர்யா பெண்களுக்கு எதிராக பேசிய ஆபாச வீடியோக்களை பார்க்க வெண்டும் என கேட்டு கொண்டார். அதனை அடுத்து, அவரின் வீடியோக்களின் சில காட்சிகளை மட்டுமே பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கிற்கான முகாந்திரம் உள்ளதாக தெரிவித்த அவர்கள் வழக்கை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.