குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!
டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் அடுத்த கட்டமாக மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி கணினியுடன் நேரடி உரையாடலை செய்ய முடிவு செய்துள்ளார்.
மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இந்த சோதனையை மேற்கொள்கிறது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மனிதர்கள் நினைப்பது கணினி மூலம் வெளிக்காட்ட முடியும்.குறிப்பாக இந்த சிப்பை தானே பொருத்திக் கொள்ளவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது தொடர்பாக நாங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் ஆய்வறிக்கைகளை எழுத்துபூர்வமாக சமர்பித்ததாகவும் தெரிவித்தார்.அடுத்த 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும் என கூறியுள்ளார்.
இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் தான் இருக்கும்.கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை நியூராலிங்க் வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒரு குரங்கு மூளையை பொருத்தி சிப்பை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதை காண முடிந்தது.
இந்த சிப் மூலம் கண் பார்வையை இழந்தவர்கள் பார்வை பெற முடியும்.முதுகுத் தண்டு ,எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலும் ஊனமுற்றவர்களை மறுவாழ்வு தருவதற்கு நியூராலிங்கின் தொழில்நுட்பம் பயனளிக்கும் என கூறினார்.மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்ட செய்து வேலை செய்ய வைக்கமுடியும் என கூறினார்.