இன்று முதல் டிசம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த இடங்களில் தெரியுமா?
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.அதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையும்.
அதன் பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகம் ,புதுவை தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவும்.காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.டிசம்பர் 5 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.