ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்! 

0
155
The information released by the railway administration! Collected so many crores in this 8 months!
The information released by the railway administration! Collected so many crores in this 8 months!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! இந்த 8 மாதத்தில் இத்தனை கோடி வசூல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில்  கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவை வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான ரயில் பயணிகள் எண்னிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இந்த 8 மாத காலத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வே ரூ 43 ஆயிரத்து 324 கோடி வருமானம் பெற்றுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரூ 24 ஆயிரத்து 631 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.மேலும் முன் பதிவு செய்து பயணம் செய்யயும் பக்கதர்களிடம் இருந்து நடப்பாண்டில் 53 கோடி 65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் ,கடந்த ஆண்டு முன் பதிவு செய்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 48 கோடியே 60 லட்சம் ஆகும்.

முன்பதிவு செய்து பயனகிகள் பயணம் மேற்கொண்ட போது 8 மாதத்தில் ரூ 34 ஆயிரத்து 303 கோடி ஆகும்.கடந்த வருடம் ரூ 22 ஆயிரத்து 904 கோடி ஆகும்.தற்போது வசூல் ஆகியுள்ள வருமானத்தை கணக்கிட்டால் இவை 50 சதவீதம் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த 8 மாத காலகட்டத்தில் முன் பதிவு இல்லாமல் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.கடந்த ஆண்டு 138 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.மேலும் நடப்பாண்டில் இவ்வாறு பயணம் செய்தவர்கள் ரூ 9 ஆயிரத்து 21 கொடியாகும்.கடந்த ஆண்டு இது ரூ 1,728 கோடியாக தான் இருந்தது.

தற்போது 422 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த பயணிகளால் நல்ல வளர்ச்சி காணப்படுகின்றது மத்திய அரசின் வருவாயும் அதிகரித்து வருகின்றது,

Previous articleஇபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக!
Next articleஇன்றும் வரும் 5 ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!