ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

0
198
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவியுடைய அற்புதமான புரிதல் உணர்வு காணப்படும்.

உத்தியோகத்தில் சிறப்பான அம்சங்கள் கைக்கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த ஒரு சில குழப்பங்கள் மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here