மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் அலைச்சலும் மாலையில் ஆதாயமும் கிடைக்கும் நாள்!

0
185
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் அலைச்சலும் மாலையில் ஆதாயமும் கிடைக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் ஆதாயமும் கிடைக்கும் நாள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விவாதத்தைக் கொண்டு வர வேண்டாம்.

உபயோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleசெல்வராகவனின் பகாசூரன் டிரைலர் வெளியானது…
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here