செல்வராகவனின் பகாசூரன் டிரைலர் வெளியானது…

0
164

இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள பகாசூரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் இயக்கி வரவேற்பை பெற்றது.

இப்படங்களை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள பகாசூரன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் கதாநாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ள இந்த இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

author avatar
Parthipan K