மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு வந்து சேரும் நாள்!

0
185
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு வந்து சேரும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் தன வரவு வந்து சேரும். மாலையில் சகாயஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் தைரியம் அதிகமாகும். நிதி அருமையாக உள்ளது.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் அதிரடி திட்டங்கள் வெற்றியடையும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனவரவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு சில நன்மைகளை செய்வார்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்! நினைத்தது நிறைவேறும் நாள்
Next articleமகர ராசி – இன்றைய ராசிபலன்! ஆதயாம் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here