முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கருந்திட்டுக்கள் ஏற்பட காரணம் என்ன?

0
277

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும்.

முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் ஏதேனும் மாசு மருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சுரத்தலில் சமநிலையின்மை தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும்போதோ அல்லது பெண்கள் கருவுற்று இருக்கும்போதோ அல்லது ஹைப்போதைராய்டிசம் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட நிலையிலோ ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முகத்தில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது.

அந்த சமயத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள், எரிச்சல், கரும்புள்ளிகள் அல்லது முகத்தின் நிறம் சீரற்று இருப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. நமது நிறத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெலனின் எனும் நிறமி தான், மெலனின் அதிகமாக இருந்தால் நமது சருமம் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது அதுவே மெலனின் கம்மியாக இருப்பவர்களுக்கு சீக்கிரமே நிறம் மாறிவிடுகிறது.

இதனால் முகத்தில் கருமை, முதுமை தோற்றம் போன்றவை ஏற்படுகிறது, உங்கள் முகத்தில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது சருமத்தில் சில காயங்கள் ஏற்பட்டாலோ அது முகத்தில் கருமையான திட்டுகளாக மாறிவிடுகிறது. சருமம் எவ்வித பாதிப்பும் அடையாமல் இருக்க உங்கள் உடலை நீங்கள் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதோடு வைட்டமின் சிசத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும்.

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும். இதுபோன்ற சில நோய்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கூட நமது சருமத்தில் கருந்திட்டுக்களை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

Previous articleமாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! 
Next articleபாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை!