பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மெட்ராஸ் IIT-ல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

Photo of author

By Savitha

சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

1) நிறுவனம்:

இந்திய தொழில்நுட்ப கழகம்-Indian Institute of Technology Madras (IIT Madras)

2) இடம்:

சென்னை

3) வேலை வகை:

ஒப்பந்த அடிப்படியில் பணி நியமனம் செய்யப்படும்.

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.

5) பணிகள்:

Project Associate

6) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பலக்லைக்கழகத்தில் பி.இ/ பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

7) வயது வரம்பு:

Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும்.

8) சம்பளம்:

Project Associate பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

9) விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக தேவையான விவரங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

07.12.2022